கேரளாவில் தென்மேற்கு பருவமழை 5 நாட்கள் தாமதமாக துவங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்


கேரளாவில் தென்மேற்கு பருவமழை 5 நாட்கள் தாமதமாக துவங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 15 May 2019 7:34 AM GMT (Updated: 15 May 2019 7:34 AM GMT)

கேரளாவில் தென்மேற்கு பருவமழை 5 நாட்கள் தாமதமாக துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

வழக்கமாக தென்மேற்கு பருவ மழை ஜூன் 1 ஆம் தேதி துவங்கும். நாடு முழுவதும் பல இடங்களில் வெப்ப அலை வீசி வருவதால், தென்மேற்கு பருவ மழையை ஆவலோடு மக்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், நிகழாண்டில் தென்மேற்கு பருவ மழை வழக்கத்தை விட 5 நாட்கள் தாமதமாக துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஜூன் 6 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கும். அந்தமான் கடல்பகுதிகளின் தெற்குப் பகுதிகள் மற்றும் நிகோபார் தீவுகள், அதை ஒட்டியுள்ள வங்காள விரிகுடா ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளது. 

இப்பகுதிகளில் மே 18, 19 ஆகிய தினங்களில் தென்மேற்கு பருவ மழை துவங்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, தனியார் வானிலை ஆய்வு அமைப்பான ஸ்கைமேட், கேரள கடற்கரை பகுதிகளில் ஜூன் 4 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கும் என்று கணித்து இருந்தது. 

Next Story