கோட்சே குறித்து சர்ச்சை கருத்து: பா.ஜனதா நிர்வாகிகள் மீது நடவடிக்கை -அமித்ஷா எச்சரிக்கை
கோட்சே குறித்து சர்ச்சை கருத்து கூறிய பா.ஜனதா நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி என கோட்சேவை குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்த பா.ஜ.க. வேட்பாளர் பிரக்யா சிங், ”நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தராக இருந்தார், இருக்கிறார், இன்னும் இருப்பார். அவரை தீவிரவாதி என்று அழைப்பவர்களுக்கு மக்கள் தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.
அவரைத்தொடர்ந்து பா.ஜ.க. எம்.பி. நளினி கட்டீல், கோட்சேவை ராஜீவ் காந்தியுடன் ஒப்பிட்டு பேசினார். பா.ஜ.க. மூத்த தலைவர் அனந்தகுமார் ஹெக்டே, கோட்சே பற்றி விவாதம் மகிழ்ச்சி அளிப்பதாக கருத்து தெரிவித்தார். தங்கள் கட்சி நிர்வாகிகளின் சர்ச்சை பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், “கோட்சே பற்றிய கட்சி நிர்வாகிகளின் பேச்சு அவர்களின் சொந்த கருத்து. இதற்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்களின் பேச்சு கட்சி கொள்கைகளுக்கு எதிரானது. அவர்கள் தங்கள் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளனர். இருப்பினும் அவர்களிடம் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து நடவடிக்கை எடுக்கும். விசாரணை அறிக்கையை 10 நாட்களுக்குள் அளிக்க ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அறிவுறுத்தி உள்ளேன்” என்று அவர் கூறினார்.

Related Tags :
Next Story