தேசிய செய்திகள்

தேர்தலில் தோல்வி: 10 நாள்களில் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் திட்டம் + "||" + Rahul Gandhi takes back offer to resign

தேர்தலில் தோல்வி: 10 நாள்களில் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் திட்டம்

தேர்தலில் தோல்வி: 10 நாள்களில் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் திட்டம்
தேர்தல் தோல்விக்கு பொறுப்பான நிர்வாகிகள் மீது 10 நாள்களில் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி,
 
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெறும் 52 இடங்களை மட்டுமே காங்கிரஸ் வென்றது.  இந்த படுதோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல் காந்தி முன்வந்தார். ஆனால், அவரது முடிவை காங்கிரஸ் செயற்குழு நிராகரித்துவிட்டது. மேலும், கட்சியை மறுசீரமைப்பதற்கான அதிகாரத்தை, ராகுலுக்கு செயற்குழு வழங்கியது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை, ராகுல் காந்தி திரும்பப் பெற்றுவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன. தேர்தல் தோல்விக்கு பொறுப்பான நிர்வாகிகள் மீது அடுத்த 10 நாள்களில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.