தேசிய செய்திகள்

ராஜஸ்தான் மாநில பா.ஜனதா தலைவர் மதன் லால் சைனி காலமானார் + "||" + Rajasthan: BJP State President Madan Lal Saini has passed away

ராஜஸ்தான் மாநில பா.ஜனதா தலைவர் மதன் லால் சைனி காலமானார்

ராஜஸ்தான் மாநில பா.ஜனதா தலைவர் மதன் லால் சைனி காலமானார்
ராஜஸ்தானில் பா.ஜனதாவின் மாநிலத் தலைவர் மதன் லால் சைனி உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
புதுடெல்லி,
        
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜஸ்தான் பா.ஜனதா மாநிலத் தலைவர் மதன் லால் சைனி(75) இன்று காலமானார்.

மதன் லால் சைனி கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, கடந்த சனிக்கிழமை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 7 மணியளவில் காலமானார். இவருக்கு ரத்தம் சார்ந்த பிரச்சினை இருந்ததாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்தனர்.


இவரது மறைவுக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பா.ஜனதா செயல் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் மதன் லால் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.