நெருக்கடி நிலை போன்ற சூழல் மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்


நெருக்கடி நிலை போன்ற சூழல் மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்
x
தினத்தந்தி 25 Jun 2019 6:25 AM GMT (Updated: 25 Jun 2019 7:05 AM GMT)

நெருக்கடி நிலை போன்ற சூழல் மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

கடந்த 1975 ஆம் ஆண்டு இதே நாள் (ஜூன் 25) அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. சுமார் 2 ஆண்டுகள் நீடித்த நெருக்கடி நிலை 1977 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி விலக்கி கொள்ளப்பட்டது.  இந்த கால கட்டத்தில் அரசின் ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.  நாடு முழுவதும் விசாரணை எதுவும் இன்றி சுமார் ஒரு லட்சம் பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். 

நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு இன்றோடு 44  ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கெஜ்ரிவால் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்  கூறியிருப்பதாவது, “ 44  ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், அப்போதைய பிரதமரால் ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலை இந்தியா பார்த்தது.  இந்த மாபெரும் ஜனநாயகத்தில் மீண்டும் அதேபோன்றதொரு  அரசியலமைப்பு பேரழிவை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று தீர்மானம் செய்து கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story