தனியார் மயமாக்குவதை கண்டித்து ரெயில்வே ஊழியர்கள் 6 நாட்கள் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம்


தனியார் மயமாக்குவதை கண்டித்து ரெயில்வே ஊழியர்கள் 6 நாட்கள் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம்
x
தினத்தந்தி 28 Jun 2019 7:30 PM GMT (Updated: 28 Jun 2019 7:12 PM GMT)

தனியார் மயமாக்குவதை கண்டித்து ரெயில்வே ஊழியர்கள் 6 நாட்கள் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் நடத்த உள்ளனர்.

புதுடெல்லி,

அகில இந்திய ரெயில்வே ஊழியர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிறப்பாக இயங்கும் ரெயில்வே உற்பத்தி பிரிவுகளை கார்ப்பரேஷன் ஆக்குவதன் மூலம் தனியாருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அனைத்து ரெயில்வே அச்சகங்களையும் மூட உத்தரவிட்டுள்ளது. சில ரெயில்களை ஐ.ஆர்.சி.டி.சி.க்கு வழங்கவும், ரெயிலில் உள்ள சேவைகளை தனியாருக்கும், சில ரெயில் போக்குவரத்தில் தனியாரை அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்திய ரெயில்வேயின் நிதி நிலைமையை வேகமாக அழித்துவிடும்.

இந்த முயற்சிகளை எதிர்த்து தீவிர போராட்டம் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து ரெயில்வே ஊழியர்களும் ஜூலை 1-ந் தேதி முதல் 6-ந்தேதி வரை கருப்பு சின்னம் அணிந்து பணிபுரிய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story