சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தை ஒழுங்குபடுத்த சட்டமா? மத்திய அரசு பதில்


சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தை ஒழுங்குபடுத்த சட்டமா? மத்திய அரசு பதில்
x
தினத்தந்தி 12 July 2019 2:40 AM IST (Updated: 12 July 2019 2:40 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனம் மற்றும் நடத்தையை ஒழுங்குபடுத்துவதற்கு சட்டமா? மத்திய அரசு பதில் பதில் அளித்தனர்.

புதுடெல்லி,

பொது நலனை கருத்தில் கொண்டு, சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனம் மற்றும் நடத்தையை ஒழுங்குபடுத்துவதற்கு நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் திட்டம் அரசிடம் உள்ளதா என நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. விவேக் டங்கா கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு மத்திய அரசின் சார்பில் சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று எழுத்து மூலம் பதில் அளித்தார்.

அந்தப் பதிலில் அவர் கூறி இருப்பதாவது:-

ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நடத்தை, 1997-ம் ஆண்டு, மே மாதம் 7-ந் தேதி நடந்த சுப்ரீம் கோர்ட்டு முழு கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதி வாழ்வின் மதிப்புகள் மறுசீரமைப்பு மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் திட்டம் அரசின் பரிசீலனையில் இல்லை.

உயர்நீதித்துறையில் நீதிபதிகள் நியமனம், மத்திய அரசு மற்றும் நீதித்துறையின் கூட்டு மற்றும் ஒருங்கிணைந்த செயல்முறையில் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story