மத்திய அரசு நடவடிக்கைகளால் வாராக்கடன் ரூ.1 லட்சம் கோடி குறைந்தது - நிர்மலா சீதாராமன் தகவல்


மத்திய அரசு நடவடிக்கைகளால் வாராக்கடன் ரூ.1 லட்சம் கோடி குறைந்தது - நிர்மலா சீதாராமன் தகவல்
x
தினத்தந்தி 16 July 2019 10:04 PM GMT (Updated: 16 July 2019 10:04 PM GMT)

மத்திய அரசு நடவடிக்கைகளால் வாராக்கடன் ரூ.1 லட்சம் கோடி குறைந்ததாக நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஒரு கேள்விக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி, வர்த்தக வங்கிகளின் வாராக்கடன் ரூ.10 லட்சத்து 36 ஆயிரத்து 187 கோடியாக இருந்தது. அதை வசூலிக்க மத்திய அரசு 4 விதமான வியூகங்களை பின்பற்றியது.

திவால் சட்டத்தை வலுப்படுத்துதல், கடன் செலுத்த தவறிய நிறுவனங்களை கையகப்படுத்துதல், அவற்றை ஏலம் விட்டு நிதி திரட்டுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் வாராக்கடன் அளவு 2018-2019 நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 562 கோடி குறைந்தது. கடந்த மார்ச் 31-ந் தேதிப்படி, வாராக்கடன் அளவு ரூ.9 லட்சத்து 33 ஆயிரத்து 625 கோடியாக உள்ளது.

ரூ.50 கோடிக்கு மேற்பட்ட வாராக்கடன்களை மோசடியாக கருதி குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story