கேரளாவில் நாளை முதல் மழை படிப்படியாக குறையும் -இந்திய வானிலை ஆய்வு மையம்


கேரளாவில் நாளை முதல் மழை படிப்படியாக குறையும் -இந்திய வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 24 July 2019 6:04 AM GMT (Updated: 24 July 2019 6:04 AM GMT)

கேரளாவில் நாளை முதல் மழை படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

புதுடெல்லி

கடந்த சில நாட்களாக கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மிக கனமழை பெய்து வரும் நிலையில் நாளை முதல் கேரளாவில் மழை படிப்படியாக குறையும்  என இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் மேலும் கூறி உள்ளதாவது:-

கடந்த இரண்டு நாட்களில் கேரளா முழுவதும் பருவமழை அதன் தீவிரத்தை இழந்துள்ளது. இருப்பினும் மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கூறியுள்ளது. அதன்படி, வானிலை எச்சரிக்கைகள் பல மாவட்டங்களுக்கு  குறைக்கப்பட்டு உள்ளது.

மழையின் தீவிரம் குறைந்துவிட்டதால், அடுத்த மூன்று நாட்களுக்கு மாநிலத்தின் எந்தப் பகுதிக்கும் சிவப்பு அல்லது ஆரஞ்சு எச்சரிக்கை எதுவும் வழங்கப்படவில்லை. கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு புதன்கிழமை வழங்கப்பட்ட கனமழை மற்றும் கனமழை வாய்ப்புகளை குறிக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு  கனமழை  எச்சரிக்கை  வழங்கப்பட்டுள்ளது.

இன்று கேரளாவில் ஓரிரு இடங்களில் கனமழை நீடிக்கும். வடகிழக்கு மற்றும் வடக்கு மாநிலங்களில் கனமழை நீடிக்கும். தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை இல்லை. தென்மேற்கு மத்திய அரபிக் கடலில் 40-50 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது. இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கூறப்பட்டு உள்ளது.

Next Story