ஆந்திராவில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்பு


ஆந்திராவில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்பு
x
தினத்தந்தி 24 July 2019 8:34 PM GMT (Updated: 24 July 2019 8:34 PM GMT)

ஆந்திராவில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

அமராவதி,

ஆந்திராவில் இயங்கி வரும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை மாநில சட்டசபையில் தொழிலாளர் நலத்துறை மந்திரி கும்மனுர் ஜெயராம் தாக்கல் செய்தார். இந்த மசோதா நேற்று நிறைவேறியது.

இதன்படி புதிய நிறுவனங்கள் மட்டுமின்றி ஏற்கனவே இயங்கி வரும் தொழிற்சாலைகளும், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் இந்த ஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும். தகுதி வாய்ந்த உள்ளூர் இளைஞர்கள் கிடைக்கவில்லை என்றால், அரசுடன் இணைந்து 3 ஆண்டுகளுக்குள் உள்ளூர்வாசிகளுக்கு தொழிற்சாலையே பயிற்சி வழங்க வேண்டும் என மந்திரி தெரிவித்தார்.

இது ஒரு மிகப்பெரும் நிர்வாக மாற்றம் என வர்ணித்த முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, இதன் மூலம் வேலைவாய்ப்பில் ஊழல் மறைந்து விடும் என தெரிவித்தார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதை தவிர, முதலீட்டாளர்களிடம் இருந்து வேறு எதையும் அரசு எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.

என்ஜினீயரிங் கல்லூரிகளுடன் இணைந்து மாநிலத்தின் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் திறன் மேம்பாட்டு மையங்கள் திறக்கப்படும் எனவும் முதல்-மந்திரி குறிப்பிட்டார்.

Next Story