இந்தியாவில் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்


இந்தியாவில் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 31 July 2019 4:01 PM GMT (Updated: 31 July 2019 4:11 PM GMT)

இந்தியாவில் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்க வேண்டும் என மாநிலங்களவையில் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் புற்றுநோய் சிகிச்சைக்கு மருத்துவ வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பான விவாதம் நடந்தபோது எம்.பி.க்கள் மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.  அ.தி.மு.க., தி.மு.க., சமாஜ்வாடி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்.பி.க்கள் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் மையங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். காங்கிரஸ் எம்.பி.யும்,  முன்னாள் சுகாதாரத்துறை மந்திரியுமான குலாம்நபி ஆசாத் பேசுகையில், ‘வருகிற 2025–2030–ம் ஆண்டுக்குள் புற்றுநோய், நீரிழிவு மற்றும் ரத்தஅழுத்த நோயால் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

எனவே இந்த நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்க அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார். இறுதியாக பேசிய மாநிலங்களவை தலைவர் வெங்கையாநாயுடு, புற்றுநோய் ஒழிப்பு வி‌ஷயத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்திய ஆக்கப்பூர்வமான அம்சங்கள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தார்.

Next Story