திருநங்கைகள் உரிமை பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது
திருநங்கைகள் உரிமை பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
புதுடெல்லி,
திருநங்கைகளின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி தொடர்பான உரிமைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா குறித்து பேசிய சமூக நீதித்துறை மந்திரி ரத்தன் லால் கட்டாரியா, ‘திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஒரு தேசிய அதிகாரத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் 4.80 லட்சத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். அவர்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் அபராதம் மற்றும் தண்டனை விதிக்க மசோதாவில் வழிவகுக்கப்பட்டுள்ளது. திருநங்கைகள் பிச்சை எடுப்பது குற்றச்செயல் என்ற சர்ச்சைக்குரிய விதி நீக்கப்பட்டுவிட்டது.
இந்த மசோதாவின் படி, பாலியல் அறுவை சிகிச்சை மற்றும் ஹார்மோன் சிகிச்சை ஆகியவற்றை மேற்கொள்ளாதபோது கூட ஒரு ஆண் அல்லது பெண் தங்களை திருநங்கைகளாக அடையாளம் காண அவர்களுக்கு உரிமை உண்டு’ என்றார்.

Related Tags :
Next Story