தேசிய செய்திகள்

‘நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்படும்’ - ராம்விலாஸ் பஸ்வான் தகவல் + "||" + Only nationwide ration card scheme implemented - Ramvilas Paswan Information

‘நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்படும்’ - ராம்விலாஸ் பஸ்வான் தகவல்

‘நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்படும்’ - ராம்விலாஸ் பஸ்வான் தகவல்
நாடு முழுவதும் அடுத்த ஆண்டு (2020) ஜூன் 1-ந் தேதிக்குள் ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய பொது வினியோகத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.
புதுடெல்லி,

நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வகையில் ‘ஒரு நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியை சேர்ந்தவரும், எந்த பகுதியிலும் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை வாங்க முடியும்.


இந்த திட்டத்துக்கான பணிகளை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வரும் நிலையில், முதற்கட்டமாக நேற்று 4 மாநிலங்களில் இந்த திட்டத்தை மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தொடங்கிவைத்தார். அதன்படி ஆந்திரா-தெலுங்கானா மற்றும் குஜராத்-மராட்டியம் மாநிலங்களுக்கு இடையே பொருட்கள் வாங்கிக்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டது.

இதன் மூலம் ஆந்திரா மக்கள் தங்கள் மாநிலத்தின் எந்த பகுதியிலோ அல்லது தெலுங்கானாவிலோ பொருட்கள் வாங்க முடியும். மேலும் தெலுங்கானா மக்களும் தங்கள் மாநிலத்தின் எந்த பகுதியிலோ அல்லது ஆந்திராவிலோ பொருட்கள் வாங்கலாம். இதைப்போல குஜராத், மராட்டிய மக்களும் தங்கள் மாநிலங்களுக்குள் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம்.

அடுத்ததாக அரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், திரிபுரா ஆகிய 7 மாநிலங்களில் இந்த திட்டம் அறிமுகமாகி இருக்கிறது. தற்போது இந்த மாநில மக்கள் தங்கள் மாநிலத்துக்குள் எந்த பகுதியிலும் பொருட்கள் வாங்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதைத்தொடர்ந்து மேற்படி 11 மாநிலங்களும் தங்களுக்குள்ளே எந்த மாநிலத்திலும் பொருட்களை வாங்கிக்கொள்ளும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த நடவடிக்கை அடுத்த ஆண்டு (2020) ஜனவரிக்குள் அமலில் வரும் என மத்திய உணவுத்துறை செயலாளர் ரவி காந்த் தெரிவித்தார்.

ஆந்திரா-தெலுங்கானா மற்றும் குஜராத்-மராட்டியம் மாநிலங்களுக்கு இடையேயான ரேஷன் திட்டத்தை தொடங்கி வைத்தபின் ராம்விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இன்று (நேற்று) ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தினம். தலா 2 மாநிலங்களுக்கு இடையேயான ரேஷன் கார்டு திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். அடுத்த ஆண்டு ஜூன் 1-ந் தேதிக்குள் அனைத்து மாநிலங்களையும் திட்டத்தில் சேர்த்து தேசிய அளவில் முழுமையாக செயல்படுத்தப்படும்’ என்று தெரிவித்தார்.

இந்த திட்டத்துக்கான உணவு பொருள் கையிருப்பை எவ்வாறு பராமரிப்பீர்கள்? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ‘அதில் எந்த பிரச்சினையும் இல்லை. எனெனில் இந்திய உணவு கழகத்தின் குடோன்கள் அனைத்தும் போதுமான கொள்ளளவுடன் இருப்பதுடன், கூடுதலாக 3 மாதங்களுக்கு தேவையான கூடுதல் பொருட்களை இருப்பு வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது’ என்று கூறினார்.

தமிழகத்துக்கு விலக்கு கிடையாது

மத்திய அரசின் ‘ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு காணப்படுகிறது. எனவே இந்த திட்டத்தில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படுமா? என ராம்விலாஸ் பஸ்வானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதிலளிக்கையில், “இந்த திட்டத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க முடியாது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டத்துக்கு வாய்ப்பு இல்லை - மத்திய மந்திரி தகவல்
நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டத்துக்கு வாய்ப்பு இல்லை என மத்திய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.
2. நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க நடவடிக்கை - மாநிலங்களவையில் அமித் ஷா அறிவிப்பு
நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவையில் உள்துறை மந்திரி அமித் ஷா அறிவித்தார்.
3. நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு? அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு? என்பது தொடர்பான வழக்கில், சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
4. நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழைக்கு 1,900 பேர் சாவு
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழைக்கு சுமார் 1,900 பேர் பலியானதாகவும், 1 லட்சம் வீடுகள் சேதமடைந்ததாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
5. நாடு முழுவதும் பிளாஸ்டிக் தடை சட்டம் பிரதமருக்கு, சிவசேனா வேண்டுகோள்
நாடு முழுவதும் பிளாஸ்டிக் தடை சட்டம் கொண்டு வரும்படி பிரதமருக்கு சிவசேனா வேண்டுகோள் விடுத்துள்ளது.