தேசிய செய்திகள்

டெல்லியில் போலீஸ்காரரை காரில் இழுத்துச்சென்ற கொலை குற்றவாளிகள் கைது + "||" + In Delhi, a policeman was dragged into the car Arrested murder convicts

டெல்லியில் போலீஸ்காரரை காரில் இழுத்துச்சென்ற கொலை குற்றவாளிகள் கைது

டெல்லியில் போலீஸ்காரரை காரில் இழுத்துச்சென்ற கொலை குற்றவாளிகள் கைது
டெல்லியில் போலீஸ்காரரை காரில் இழுத்துச்சென்ற கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ரோகினி செக்டார்-20 பகுதியில் 2 போலீஸ்காரர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தினர். அந்த காரில் கொலை குற்றவாளியான சோனு தபாஸ், அவரது கூட்டாளி அசோக் மற்றும் ஒரு சிறுவன் இருந்தனர்.


அவர்களை விசாரிக்க முயன்றபோது காரின் கண்ணாடியை இறக்கிய சோனு தபாஸ், போலீஸ்காரர் கவிந்தர் என்பவர் வைத்திருந்த துப்பாக்கியை பறித்துக்கொண்டார். பின்னர் அவரது கையை காரில் இருந்து பிடித்துக்கொண்டு தர, தரவென்று சிறிது தூரம் இழுத்துச்சென்று விட்டுவிட்டனர். இதில் கவிந்தர் பலத்த காயம் அடைந்தார். இதுபற்றி அறிந்த டெல்லி போலீசார் உடனடியாக சோனு தபாஸ், அசோக் மற்றும் சிறுவனை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கவிந்தரின் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.