டேவிஸ் கோப்பை டென்னிஸ்; 55 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தானுக்கு செல்வது உறுதி


டேவிஸ் கோப்பை டென்னிஸ்; 55 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தானுக்கு செல்வது உறுதி
x
தினத்தந்தி 12 Aug 2019 9:06 AM GMT (Updated: 12 Aug 2019 9:06 AM GMT)

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் விளையாட 55 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தானுக்கு செல்வது உறுதியாகியுள்ளது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய-ஓசினியா குரூப்-1ல் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் செப்டம்பர் 14, 15-ந்தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடக்கிறது. 

பயங்கரவாதம் தொடரபாக இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதலான போக்கு நிலவி வருகிறது. பயங்கரவாதத்தை நிறுத்தும் வரையில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது என இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது. இருதரப்பு விளையாட்டு போட்டிகளும் நடக்கவில்லை. இந்நிலையில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் கலந்துக்கொள்ள இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா? என்ற கேள்வி எழுந்தது. ஜூலையில் இந்திய டென்னிஸ் சங்க பொதுச் செயலாளர் ஹிரோன்மோய் சட்டர்ஜீ  இந்த போட்டியில் இந்திய அணி பங்கேற்க இருப்பதைஉறுதிப்படுத்தினார். 

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி தொடரில் விளையாட 55 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தானுக்கு செல்கிறது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய அரசு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. இதனால் இருதரப்பு இடையே அசாதாரண நிலை நிலவுகிறது. எனவே, போட்டியில் கலந்துக்கொள்ள இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இந்திய அணி கண்டிப்பாக செல்லும் என மத்திய அரசிடம் இருந்து பதில் வெளியாகியுள்ளது. 

பாகிஸ்தானில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நடைபெறுவது தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு பேசுகையில், “பாகிஸ்தான் உடனான இருதரப்பு போட்டிகளுக்கு இந்திய அரசிடம் இருந்து அனுமதி பெற வேண்டியது உள்ளது, ஆனால் சர்வதேச போட்டியாகும், இதில் நாம் தனிப்பட்ட முறையில் எந்தஒரு நடவடிக்கையையும் எடுக்க முடியாது,” எனக் கூறியுள்ளார். 

Next Story