ஜம்மு-காஷ்மீர் விவகாரம்: ராஜ்நாத் சிங் அமெரிக்க பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசி உரையாடல்


ஜம்மு-காஷ்மீர் விவகாரம்: ராஜ்நாத் சிங் அமெரிக்க பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசி உரையாடல்
x
தினத்தந்தி 20 Aug 2019 5:23 PM GMT (Updated: 20 Aug 2019 5:23 PM GMT)

ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் தொடர்பாக , ராஜ்நாத் சிங் அமெரிக்க பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசியில் உரையாடினார்.

புதுடெல்லி,

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், அமெரிக்காவின் பாதுகாப்பு செயலர் மார்க் எஸ்பர் உடன் தொலைபேசியில் பேசினார்.

அந்த உரையாடலின் போது, எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து எஸ்பரிடம் ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார். மேலும் காஷ்மீரில் அமைதியும், நிலைத்தன்மையும் நிலவ இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு பொருளாதார வளர்ச்சி, ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ராஜ்நாத் சிங் அவரிடம் கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் உள்நாட்டு விவகாரத்தில் சமீபத்திய முன்னேற்றங்கள் இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதிசெய்துள்ளதாக, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் பாராட்டினார். மேலும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எந்தவொரு பிரச்சினையும் இருதரப்பு ரீதியாக பேசி தீர்க்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story