தேசிய செய்திகள்

ராகுல் காந்தி ஸ்ரீநகர் விமான நிலையம் வருகை + "||" + Congress leader Rahul Gandhi arrives at SRINAGAR airport.

ராகுல் காந்தி ஸ்ரீநகர் விமான நிலையம் வருகை

ராகுல் காந்தி ஸ்ரீநகர் விமான நிலையம் வருகை
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி ஸ்ரீநகர் விமான நிலையம் வந்து சேர்ந்தார்.
ஸ்ரீநகர், 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அரசியலமைப்பில் 370வது பிரிவை திரும்பப் பெற்றது. மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள் என்று மத்திய அரசு கூறினாலும் அங்கு பெரும்பாலான இடங்களில் இன்னும் பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்படவில்லை.

மாநிலத்தை பார்வையிட கடந்த வாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட்  பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோர் சென்றபோது ஸ்ரீநகரில் இருந்து திருப்பி விடப்பட்டனர். அதேபோல காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு செல்ல முடிவு செய்தனர். ராகுல்காந்தியுடன் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மூத்த தலைவர்களும் ஜம்மு-காஷ்மீருக்கு இன்று செல்ல திட்டமிட்டு இருந்தனர். இதன்படி, ராகுல் காந்தி ஸ்ரீநகர் விமான நிலையம் வருகை தந்துள்ளார்.

எதிர்க்கட்சித்தலைவர்களை மாநிலத்துக்குள் வர வேண்டாம் என்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ராகுல் காந்திக்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
ரபேல் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக கூறியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ராகுல் காந்திக்கு எதிராக மும்பையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக்கோரி பா.ஜனதா சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம்
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக்கோரி பா.ஜனதா சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது.
3. விமான நிலையம், 5 நட்சத்திர ஓட்டலுடன் பொலிவு பெறும் அயோத்தி: சொகுசு விடுதி, படகு போக்குவரத்துக்கும் ஏற்பாடு
விமான நிலையம், 5 நட்சத்திர ஓட்டல், சொகுசு தங்கும் விடுதி போன்ற வளர்ச்சி திட்டங்கள், அயோத்தியில் தொடங்கப்பட உள்ளன.
4. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நல்லிணக்கத்தை பேண வேண்டும்: ராகுல் காந்தி
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நல்லிணக்கத்தை பேண வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
5. பணமதிப்பிழப்பு என்ற தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டது -ராகுல் காந்தி
பணமதிப்பிழப்பு என்ற தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை சாடியுள்ளார்.