தேசிய செய்திகள்

வயநாட்டில் சுற்றுப்பயணம்: ராகுல்காந்தி கன்னத்தில் முத்தமிட்ட வாலிபர் + "||" + Rahulganthi young men kissing on the cheek

வயநாட்டில் சுற்றுப்பயணம்: ராகுல்காந்தி கன்னத்தில் முத்தமிட்ட வாலிபர்

வயநாட்டில் சுற்றுப்பயணம்: ராகுல்காந்தி கன்னத்தில் முத்தமிட்ட வாலிபர்
வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற ராகுல் காந்தியின் கன்னத்தில், இளைஞர் ஒருவர் அன்பு மிகுதியில் முத்தமிட்டார். இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வயநாடு

கேரள மாநிலம் வயநாட்டில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கன்னத்தில், இளைஞர் ஒருவர் முத்தமிட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கேரளாவில் அண்மையில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகள் பலத்த சேதமடைந்தன. இந்த நிலையில் தனது மக்களவைத் தொகுதியான வயநாட்டில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி  கடந்த 11ந்தேதி முதல் 14ந்தேதி வரை வயநாட்டில் சுற்றுப்பயணம் செய்து, பொதுமக்களை சந்தித்து வெள்ள மீட்பு பணிகளை கேட்டறிந்தார்.

இந்நிலையில், வயநாடு தொகுதிக்கு மீண்டும் அவர் சென்றுள்ளார்.  நேற்று முதல் 3 நாட்கள் அங்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். தொடர்ந்து மக்களை சந்தித்த அவர், காரில் அமர்ந்தவாறு ஆறுதல் தெரிவித்து கைக்குலுக்கினார்.

அப்போது ராகுல் காந்தியுடன் கைக்குலுக்கிய இளைஞர் ஒருவர், திடீரென அன்பு மிகுதியில் அவரது கன்னத்தில் முத்தமிட்டார். இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
2. உன்னாவ் விவகாரம் - காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து வெளிநடப்பு
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் எரிக்கப்பட்டதைக் கண்டித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
3. காங்கிரசுடன் கரம் கோர்த்த காவி: அரசியலில் புதிய சகாப்தம்
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை எனும் கூற்று, மராட்டிய அரசியல் களத்தில் வலுவாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.
4. மராட்டியத்தில் பா.ஜனதா ஆட்சி நீடிக்காது சேலத்தில் கே.வி.தங்கபாலு பேட்டி
மராட்டியத்தில் பா.ஜனதா ஆட்சி நீடிக்காது என சேலத்தில் கே.வி.தங்கபாலு கூறினார்.
5. நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவை வீழ்த்துவோம்: காங்கிரஸ் உறுதி
மராட்டியத்தின் அரசியல் வரலாற்றில் இன்று கருப்பு நாள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கடுமையாக சாடியுள்ளார்.