தேசிய செய்திகள்

தேச துரோக வழக்கில் ஷீலா ரஷீதை கைது செய்ய இடைக்கால தடை- டெல்லி நீதிமன்றம் உத்தரவு + "||" + Court grants interim protection from arrest to Shehla Rashid in sedition case

தேச துரோக வழக்கில் ஷீலா ரஷீதை கைது செய்ய இடைக்கால தடை- டெல்லி நீதிமன்றம் உத்தரவு

தேச துரோக வழக்கில் ஷீலா ரஷீதை கைது செய்ய இடைக்கால தடை- டெல்லி நீதிமன்றம் உத்தரவு
தேச துரோக வழக்கில் டெல்லி மாணவி ஷீலா ரஷீதை கைது செய்ய இடைக்கால தடை விதித்து டெல்லி பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி ஷீலா ரஷீத்,  ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் சூழல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தவறான தகவல்களை பரப்பியதாக கடந்த மாதம் குற்றச்சாட்டு எழுந்தது. மாணவர்கள் தலைவராகவும், சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வரும் இவரை, பலர் டுவிட்டர் பக்கத்தில் பின்தொடர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவஸ்த்தவா, ஷீலா ரஷீத்துக்கு எதிராக கிரிமினல் புகார் ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சமூக வலைதளங்களில் இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய ராணுவத்திற்கும் எதிராக இவர் கருத்து பதிவிட்டு வருவதாகவும், இவர் செய்து வருவது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 124-ஏன் கீழ் மிகப்பெரிய தேசத்துரோக குற்றம் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனால் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி  ஷீலா ரஷீத் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124-ஏ, 153, 153-ஏ, 504 மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த பட்டியாலா நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி பவன் குமார், ஷீலா ரஷீதை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அதன்பிறகு இந்த வழக்கு தொடர்பான விசாரணை நவம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கு தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக ஷீலா ரஷீத் தெரிவித்துள்ளார். மேலும் ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் சூழல் குறித்து ஷீலா ரஷீத் கூறிய கருத்தை ஆதாரமற்றது என்று கூறி இந்திய ராணுவம்  நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. பரூக் அப்துல்லா கைதுக்கு ப.சிதம்பரம் கண்டனம்
பரூக் அப்துல்லா கைதுக்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2. சிவகங்கை அருகே ஜீவ சமாதிக்கு முயற்சித்த சாமியாரின் மகன் உள்பட 3 பேர் கைது
சிவகங்கை அருகே ஜீவசமாதிக்கு முயற்சித்த சாமியாரின் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பந்தல், மின்விளக்கு அலங்காரத்துக்கு ரூ.3 லட்சம் கொடுக்காமல் மோசடி செய்ததாக அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
3. மதுபோதையில் தகராறு: கல்லால் தாக்கி தொழிலாளி கொலை நண்பர் கைது
புதுக்கடை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கப்பட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை வழக்கின் கீழ் நண்பர் கைது செய்யப்பட்டார்.
4. முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 12 போ் கைது
5, 8-ம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
5. பர்கூர் அருகே, பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - தொழிலாளி கைது
பர்கூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.