தேசிய செய்திகள்

நாட்டின் குறைந்த வயது ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் + "||" + Tamilisai Soundararajan youngest governor; Andhra's Harichandan oldest at 85

நாட்டின் குறைந்த வயது ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

நாட்டின் குறைந்த வயது ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
இந்தியாவின் குறைந்த வயது ஆளுநர் என்ற பெருமையை தமிழக முன்னாள் பா.ஜ.க. தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுள்ளார்.
புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து கடந்த செப்டம்பர் 1ந்தேதி அறிவிப்பு வெளியிட்டார்.

இதன்படி, கேரள ஆளுநராக இருந்து வந்த சதாசிவம் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஆரிப் முகமது கான் நியமனம் செய்யப்பட்டார்.

இதேபோன்று இமாசல பிரதேச ஆளுநராக பா.ஜ.க. மூத்த தலைவர் பண்டாரு தத்தாத்ரேயா நியமிக்கப்பட்டார்.  இதனால் இமாசல பிரதேச ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ராஜஸ்தானின் ஆளுநராக மாற்றப்பட்டார்.  மகாராஷ்டிர ஆளுநராக பகத் சிங் கோஷ்யாரி நியமிக்கப்பட்டார்.

தெலுங்கானா ஆளுநராக தமிழக முன்னாள் பா.ஜ.க. தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் (வயது 58) நியமனம் செய்யப்பட்டார்.  அவர் கடந்த 8ந்தேதி காலை 11 மணிக்கு ஹைதராபாத் ராஜ்பவனில்
பொறுப்பேற்று கொண்டார்.  தெலுங்கானாவின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையை பெற்றுள்ள அவர் தமிழகத்தின் முன்னாள் பா.ஜ.க. தலைவராக பதவி வகித்தவர்.

கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 2ந்தேதி தெலுங்கானா உருவானபொழுது ஆளுநராக நரசிம்மன் பொறுப்பேற்றார்.  அவரது பதவி காலம் முடிவடைந்து விட்ட நிலையில், அந்த பதவிக்கு தமிழிசையை கடந்த 1ந்தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்து உத்தரவிட்டார்.  தெலுங்கானாவின் 2வது ஆளுநரான தமிழிசையே அனைத்து மாநில ஆளுநர்களை விட வயதில் குறைந்தவர்.  அவர் 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்கிறார்.

ஆந்திர பிரதேசத்தின் ஆளுநர் பிஸ்வா பூசண் ஹரிசந்தன் (வயது 85) வயது முதிர்ந்த ஆளுநர் ஆவார்.  ஆளுநர்களின் சராசரி வயது 73 ஆக உள்ளது.

குஜராத்தின் ஆளுநராக இந்த வருடம் ஜூலையில் பொறுப்பேற்று கொண்ட ஆச்சாரியா தேவவிரத் (வயது 60) 2வது குறைந்த வயதுடைய நபராக அறியப்பட்டு உள்ளார்.

ஆளுநர்களில் பலர் 70 முதல் 79 வயதுக்குள் உள்ளவர்களாக உள்ளனர்.

மொத்தமுள்ள 29 மாநிலங்களில் உள்ள 28 ஆளுநர்களில் ஒருவர் 60 வயதுக்கு உட்பட்டும், 7 பேர் 60 வயதிலும், 14 பேர் 70 வயதிலும், 6 பேர் 80 வயதிலும் உள்ளனர்.

அசாமின் ஆளுநரான ஜெகதீஷ் முகி (வயது 76) கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 8ந்தேதியில் இருந்து மிசோரம் (கூடுதல் பொறுப்பு) ஆளுநராகவும் பதவி வகித்து வருகிறார்.

இவர்களில் 19 பேர் முதல் முறையாக ஆளுநர்களாக பதவியேற்றுள்ளனர்.  9 பேர் மற்ற மாநிலங்களில் ஆளுநர்களாக இருந்த அனுபவம் வாய்ந்தவர்கள்.  6 பேர் பெண்கள் ஆவர்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசியலில் சிறந்த வாய்ப்பினை பா.ஜ.க. எனக்கு ஏற்படுத்தி கொடுத்தது; தமிழிசை சவுந்தரராஜன்
அரசியலில் சிறந்த வாய்ப்பினை பா.ஜ.க. எனக்கு ஏற்படுத்தி கொடுத்தது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
2. தற்போதைய அரசியல் சூழலுக்கு நாங்கள் பொறுப்பல்ல - ஆளுநரை சந்தித்த சிவசேனா தலைவர்கள் பேட்டி
தற்போதைய அரசியல் சூழலுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று ஆளுநரை சந்தித்த பின் சஞ்செய் ராவத் கூறினார்.