சென்னையில் பணியாற்றிய வருமான வரி கமிஷனர் வீடுகளில் சோதனை - சொத்துக்குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி
சொத்துக்குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறை, சென்னையில் பணியாற்றிய வருமான வரி கமிஷனர் வீடுகளில் சோதனை நடத்தியது.
புதுடெல்லி,
வருமான வரித்துறையில் கமிஷனராக பணியாற்றி வரும் நீரஜ் சிங் என்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. கடைசியாக சென்னையில் பணியாற்றிய இவர், ஏற்கனவே கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றி உள்ளார்.
நீரஜ் சிங், தனது அதிகாரத்தை பயன்படுத்தி கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில், இது தொடர்பாக நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக நேற்று நீரஜ் சிங்குக்கு தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அதன்படி மும்பை, புனே மற்றும் கொல்கத்தாவில் தலா 2 இடங்களில் இந்த சோதனை நடந்தது.
இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய சொத்து ஆவணங்கள், வங்கி கணக்குகள், முதலீடு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story