பாகிஸ்தான் தனது பயங்கரவாத சக்திகளாலேயே அழிந்துவிடும் - மத்திய மந்திரி பேச்சு


பாகிஸ்தான் தனது பயங்கரவாத சக்திகளாலேயே அழிந்துவிடும் - மத்திய மந்திரி பேச்சு
x
தினத்தந்தி 17 Sept 2019 12:00 AM IST (Updated: 16 Sept 2019 11:26 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் தனது பயங்கரவாத சக்திகளாலேயே அழிந்துவிடும் என மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

ராம்பூர்,

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் நடைபெற்ற தேச ஒற்றுமை பிரசாரத்தில் மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி பேசும்போது கூறியதாவது:-

பாகிஸ்தானின் நண்பர்களான பயங்கரவாதிகளும், ஐ.எஸ்.ஐ. உளவு பிரிவும் இந்திய முஸ்லிம்களின் தேசபக்தி பற்றி கேள்வி எழுப்பும் சதிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் அல்கொய்தா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாதம் வேரூன்ற முடியாமல் போனதற்கு இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்று தான் காரணம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய முஸ்லிம்கள் எப்போதும் அனைத்து வகையிலான பயங்கரவாதத்தையும் எதிர்ப்பவர்கள். அவர்கள் அமைதி, சகோதரத்துவம், மனிதநேய பாதையில் செல்பவர்கள். பாகிஸ்தான் தனது மண்ணில் பயிற்சி அளித்துவரும் பயங்கரவாத தீயசக்திகளாலேயே அழிந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story