ஜாமீன் கிடைத்தால் நான் வெளிநாடு தப்பி விடுவேன் என சிபிஐ சொல்வது முற்றிலும் தவறு -ப.சிதம்பரம்


ஜாமீன் கிடைத்தால் நான் வெளிநாடு தப்பி விடுவேன் என சிபிஐ சொல்வது முற்றிலும் தவறு -ப.சிதம்பரம்
x
தினத்தந்தி 23 Sept 2019 12:31 PM IST (Updated: 23 Sept 2019 12:31 PM IST)
t-max-icont-min-icon

ஜாமீன் கிடைத்தால் நான் வெளிநாடு தப்பி விடுவேன் என சிபிஐ சொல்வது முற்றிலும் தவறு என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வழக்கு தொடர்ந்துள்ளார். ப.சிதம்பரத்தின் ஜாமீன் வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் விளக்க மனு தாக்கல் செய்த ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது:- எம்.பி., பொறுப்புமிக்க குடிமகனாகிய நான், ஜாமீன் கிடைத்தால் எங்கும் செல்ல மாட்டேன். ஜாமீன் கிடைத்தால் நான் வெளிநாடு தப்பி விடுவேன் என சிபிஐ சொல்வது முற்றிலும் தவறு. எனது  குடும்பம் பல ஆண்டுகளாக, பாரம்பரியமாக வசித்து வருகிறது. என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை” என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக, கடந்த 20 ஆம் தேதி சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Next Story