தமிழின மக்கள் ஒன்றுபட்டு ஒரே குரலில் பேசினால் தமிழின் மேன்மை அனைவராலும் ஏற்கப்படும்; ப. சிதம்பரம்


தமிழின மக்கள் ஒன்றுபட்டு ஒரே குரலில் பேசினால் தமிழின் மேன்மை அனைவராலும் ஏற்கப்படும்; ப. சிதம்பரம்
x
தினத்தந்தி 29 Sep 2019 6:52 AM GMT (Updated: 29 Sep 2019 6:52 AM GMT)

தமிழின மக்கள் ஒன்றுபட்டு ஒரே குரலில் பேசினால், தமிழ் மொழியின் மேன்மையையும், தமிழ் கலாச்சாரத்தின் உயர்வையும் அனைவரும் ஏற்பார்கள் என்று ப. சிதம்பரம் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடந்த ஹவுடி மோடி? நிகழ்ச்சியில் பேசும்பொழுது, சுதந்திர மற்றும் ஜனநாயக சமூகத்தில் நாட்டின் பல்வேறு மொழிகள் ஒரு முக்கிய அடையாளம் ஆக திகழ்கிறது என கூறினார்.

இதன்பின் ஐ.நா. பொது சபையில் பிரதமர் மோடி கடந்த வெள்ளி கிழமை பேசும்பொழுது, புறநானூறில் உள்ள கணியன் பூங்குன்றனார் வரிகளை மேற்கோள் காட்டி பேசினார்.  இதற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் தனது குடும்பத்தினரை டுவிட்டரில் தகவல் வெளியிடும்படி கேட்டுள்ளார்.

இதன்படி அவரது சார்பில் இன்று வெளியாகியுள்ள செய்தியில், தமிழின மக்கள் ஒன்றுபட்டு ஒரே குரலில் பேசினால்,  தமிழ் மொழியின் மேன்மையையும், தமிழ் கலாச்சாரத்தின் உயர்வையும் அனைவரும் ஏற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story