தேசிய செய்திகள்

காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிப்பு + "||" + Continuous impact on normal life in Kashmir

காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிப்பு

காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிப்பு
காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்,

காஷ்மீரில், கடந்த மாதம் 5-ந் தேதி சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று 56-வது நாளாக இயல்பு வாழ்க்கை முடங்கியது. ஊரடங்கு உத்தரவு அமலில் இல்லை. இருப்பினும், 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், மக்கள் இயல்பாக நடமாட முடியவில்லை.


ஸ்ரீநகரில் ஷெஹார் இ காஷ்மீர் பகுதியில் பல இடங்களில் கல் வீச்சு சம்பவங்கள் நடந்தன. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தினர். கண்ணீர்புகை குண்டுகளை வீசினர்.

சாதாரண தொலைபேசி செயல்பட தொடங்கியது. இருந்தாலும், மொபைல் போன், இணையதள வசதிகள் இன்னும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது - 5 தொகுதி இடைத்தேர்தல் பாதிப்பு
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதனால் 5 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலும் பாதிக்கப்பட்டது.
2. காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்தால் சிறையில் தள்ளுவோம் - பா.ஜனதா எச்சரிக்கை
காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்தால் சிறையில் தள்ளுவோம் என பா.ஜனதா எச்சரிக்கை விடுத்துள்ளது.
3. யாருக்காவது காஷ்மீர் செல்ல வேண்டுமா? நான் ஏற்பாடு செய்கிறேன் -பிரதமர் மோடி
சட்டப்பிரிவு 370-ஐ நீக்கினால் காஷ்மீரை இழந்து விடுவோம், நாடே அழிந்துவிடும் என காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்கள் நாடு அழிந்துவிட்டதா என்ன? என்று பிரதமர் மோடி காங்கிரசை சாடினார்.
4. காஷ்மீர்: சத்தீஷ்கரைச் சேர்ந்த தொழிலாளி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை
காஷ்மீரில் சத்தீஷ்கரைச் சேர்ந்த தொழிலாளியை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
5. காஷ்மீரில் செல்போன் சேவை மீண்டும் கிடைத்ததால் மக்கள் கொண்டாட்டம் - உறவுகளுக்கு பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறினர்
72 நாட்களுக்குப்பிறகு செல்போன் சேவை மீண்டும் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்த காஷ்மீர் மக்கள், தங்கள் உறவுகளை தொடர்பு கொண்டு பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர்.