கிரீஸ் நாட்டிற்கான இந்தியாவின் புதிய தூதர் நியமனம்


கிரீஸ் நாட்டிற்கான இந்தியாவின் புதிய தூதர் நியமனம்
x
தினத்தந்தி 4 Oct 2019 4:58 PM IST (Updated: 4 Oct 2019 4:58 PM IST)
t-max-icont-min-icon

கிரீஸ் நாட்டிற்கான இந்தியாவின் புதிய தூதர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

கிரீஸ் நாட்டிற்கான அடுத்த இந்திய தூதராக அம்ரித் லுகுன் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவர் 1989 ஆம் வருடத்தைச் சேர்ந்த ஐ.எப்.எஸ் அதிகாரி ஆவார். இவரது பணி நியமனம் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என்று வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு, சூடான் மற்றும் ஏமன் நாடுகளுக்கான இந்திய தூதராக அம்ரித் லுகுன் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story