பட்னாவிசின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1.8 கோடியில் இருந்து ரூ.4.24 கோடியாக உயர்வு


பட்னாவிசின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1.8 கோடியில் இருந்து ரூ.4.24 கோடியாக உயர்வு
x
தினத்தந்தி 5 Oct 2019 9:24 AM GMT (Updated: 5 Oct 2019 12:31 PM GMT)

மகாராஷ்டிர முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1.8 கோடியில் இருந்து ரூ.4.2 கோடியாக உயர்வடைந்துள்ளது.

நாக்பூர்,

மகாராஷ்டிராவில் வருகிற 21ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

அங்கு ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்த முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது சொத்து மதிப்பு ரூ.4.24 கோடி என தெரிவித்து உள்ளார்.

இவற்றில் அசையும் சொத்தின் மொத்த மதிப்பு ரூ.45 லட்சத்து 94 ஆயிரத்து 634 ஆகும்.  அசையா சொத்தின் மதிப்பு ரூ.3 கோடியே 78 லட்சத்து 29 ஆயிரம் ஆகும்.

கடந்த 2014ம் ஆண்டு அவரது அசையா சொத்தின் மதிப்பு ரூ.1.81 கோடியாக இருந்தது.  கையிருப்பு ரூ.50 ஆயிரம் என்ற அளவில் இருந்தது.  ஆனால் 2019ம் ஆண்டில் கையிருப்பு ரூ.17 ஆயிரத்து 500 என்ற அளவிலேயே உள்ளது.  அவரது வங்கி இருப்புகள் கடந்த 5 வருடங்களில் ரூ.1.19 லட்சத்தில் இருந்து ரூ.8.29 லட்சம் ஆக உயர்ந்துள்ளது.

அவரது மனைவி அம்ருதா பட்னாவிசின் அசையும் சொத்து மதிப்பு 2019ம் ஆண்டில் ரூ.3 கோடியே 39 லட்சத்து 58 ஆயிரத்து 741 ஆகவும், அசையா சொத்தின் மதிப்பு ரூ.99 லட்சத்து 39 ஆயிரம் ஆகவும் உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story