கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரி வீட்டில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.5 கோடி சிக்கியது


கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரி வீட்டில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.5 கோடி சிக்கியது
x
தினத்தந்தி 12 Oct 2019 7:45 PM GMT (Updated: 12 Oct 2019 7:34 PM GMT)

கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.5 கோடி சிக்கியது.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான பரமேஸ்வர், முன்னாள் மத்திய மந்திரி ஆர்.எல்.ஜாலப்பா ஆகியோரின் வீடு, அலுவலகங்கள் என மொத்தம் 30 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் 100 பேர் ஒரே நேரத்தில் சோதனை நடத்த தொடங்கினர்.

இந்த சோதனை 2-வது நாளாக தொடர்ந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மதியம் 3 மணியளவில் முடிவடைந்தது. 32 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது.

பரமேஸ்வரின் வீடு மற்றும் கல்லூரிகளில் இருந்து ரூ.5 கோடியை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடர்பான ஆவணங்களையும் அவர்கள் கைப்பற்றினர். பரமேஸ்வரின் வீட்டில் இருந்து ஒரு டைரியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளது குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கணக்கில் வராத பணம் மற்றும் சிக்கியுள்ள ஆவணங்களின் அடிப்படையில் மேலும் தீவிர விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Next Story