இந்திய தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம்


இந்திய தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம்
x
தினத்தந்தி 17 Oct 2019 1:12 AM GMT (Updated: 17 Oct 2019 1:12 AM GMT)

எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகக் கூறி இந்திய தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

எல்லையில் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ள பாகிஸ்தான், இந்திய தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “  பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தெற்காசிய விவகாரத்துறை இயக்குநா் முகமது பைசல், இஸ்லாமாபாதில் உள்ள பாகிஸ்தானுக்கான இந்திய துணைத் தூதா் கவுரவ் அலுவாலியாவை சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்தாா். 

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே உள்ள நெசாபிா் பகுதியில் இந்திய ராணுவத்தினா் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 3 போ் உயிரிழந்தனா். பெண், குழந்தை உள்பட 8 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து அவரிடம் குற்றம்சாட்டிய ஃபைசல், இந்த சம்பவத்துக்காக கண்டனம் தெரிவித்தாா். மேலும், சா்வதேச மனித உரிமைகள் சட்டங்களை மீறி, மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்திய ராணுவத்தினா் தொடா்ந்து தாக்குதல் நடத்துவதற்காகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.  

கடந்த 2003-ஆம் ஆண்டு மேற்கொண்ட போா்நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா மதிக்க வேண்டும் என்று அலுவாலியாவிடம் ஃபைசல் வலியுறுத்தினாா்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story