அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி : கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை


அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி : கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 18 Oct 2019 7:13 AM IST (Updated: 18 Oct 2019 7:13 AM IST)
t-max-icont-min-icon

உடல் நலக்குறைவால் கடந்த 3 நாட்களாக அமிதாப்பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மும்பை,

இந்திய திரைப்பட உலகில் மிகவும் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர் அமிதாப் பச்சன். 77-வயதான இவருக்கு கடந்த 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு விபத்துக்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட போது ஹெபிடைடிஸ் பி வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.  இதனால், அவரது கல்லீரல் 75 சதவீதம் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. 

அன்று முதல் கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தாலும் சினிமா, டிவி நிகழ்ச்சிகள் என தொடர்ந்து சுறுசுறுப்பாக அமிதாப் பச்சன் இயங்கி வருகிறார். 

இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை(அக்15) நள்ளிரவு 2 மணிக்கு, திடீர் உடல் நலக்குறைவால், சிட்டி மருத்துவமனையில் அமிதாப்  பச்சன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவுக்கு(ஐசியூ) இணையான தனி அறையில், கடந்த 3 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று  தகவல்கள் வெளியாகியுள்ளது. 

1 More update

Next Story