தேசிய செய்திகள்

பீகார், மராட்டியத்தில் 2 எம்.பி. தொகுதி தேர்தல்: பஸ்வான், பவார் கட்சி தலா ஒரு இடத்தில் வெற்றி + "||" + 2 MPs in Bihar and Maratham Module Election: Paswan, Pawar Party wins one place each

பீகார், மராட்டியத்தில் 2 எம்.பி. தொகுதி தேர்தல்: பஸ்வான், பவார் கட்சி தலா ஒரு இடத்தில் வெற்றி

பீகார், மராட்டியத்தில் 2 எம்.பி. தொகுதி தேர்தல்: பஸ்வான், பவார் கட்சி தலா ஒரு இடத்தில் வெற்றி
பீகார், மராட்டியத்தில் 2 எம்.பி. தொகுதி தேர்தலில், பஸ்வான், பவார் கட்சி தலா ஒரு இடத்தில் வெற்றிபெற்றது.
புதுடெல்லி,

பீகார் மாநிலம் சமஸ்திப்பூர் எம்.பி. தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சி வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துள்ளது.

இங்கு மறைந்த ராமச்சந்திர பஸ்வான் எம்.பி.யின் மகன் பிரின்ஸ் ராஜ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அசோக்குமாரை விட 1 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டு கூடுதலாக வாங்கி வெற்றி பெற்றார்.


மராட்டிய மாநிலம் சதாரா தொகுதியில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி.யாக இருந்த உதயன்ராஜே படேல், பாரதீய ஜனதாவுக்கு தாவியதால் அங்கு இடைத்தேர்தல் நடந்தது.

இதில் உதயன்ராஜே படேல் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளராக களம் இறங்கி தோல்வியை தழுவினார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாஸ் படேல் 85 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியை தேசியவாத காங்கிரஸ் தக்க வைத்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பீகாரில் 14 மாவட்டங்களில் வெள்ளச் சேதம் அதிகம் - கடந்த சில நாட்களில் மட்டும் 13 பேர் பலி
பீகாரில் 14 மாவட்டங்களில் வெள்ளச் சேதம் அதிகமாக காணப்படுகிறது.
2. உத்தவ் தாக்கரேவுக்கு பாலிவுட் மாஃபியா கும்பல் நெருக்கடி: பீகார் துணை முதல் மந்திரி பரபரப்பு குற்றச்சாட்டு
உத்தவ் தாக்கரேவுக்கு பாலிவுட் மாஃபியா கும்பல் நெருக்கடி அளிப்பதாக பீகார் துணை முதல் மந்திரி குற்றம் சாட்டியுள்ளார்.
3. பீகாரில் மேலும் 16 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு
பீகாரில் மேலும் 16 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
4. மும்பையில் 3 மாதங்களுக்குப் பிறகு குறைந்த எண்ணிக்கையில் பதிவான கொரோனா தொற்று
மும்பையில் 3 மாதங்களுக்குப் பிறகு கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது.
5. ஊரடங்கு தளர்வு; மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே எதிர்ப்பு
நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் தான் முதலிடம் வகிக்கிறது.