வங்கித்துறையில் ஊழலை தடுக்க ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கை


வங்கித்துறையில் ஊழலை தடுக்க ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கை
x
தினத்தந்தி 1 Nov 2019 8:42 PM GMT (Updated: 1 Nov 2019 8:42 PM GMT)

வங்கித்துறையில் ஊழலை தடுக்க ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுடெல்லி,

வங்கித்துறையில் ஊழல்கள் நடைபெறும்போதெல்லாம், அவற்றை தடுக்க தவறி விட்டதாக ரிசர்வ் வங்கி மீது குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுவதை தவிர்க்கும்வகையில் ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. நிதி சார்ந்த நிறுவனங்களை மேற்பார்வையிட தனியாக 3 துறைகளையும், ஒழுங்குபடுத்த தனியாக 3 துறைகளையும் ரிசர்வ் வங்கி வைத்துள்ளது. இந்த 2 பணிகளையும் ஒருங்கிணைந்து கவனிக்க இரண்டு ஒருங்கிணைந்த துறைகளை ரிசர்வ் வங்கி உருவாக்கி உள்ளது.

இந்த துறைகள், நேற்று அமலுக்கு வந்தன. இதன்மூலம், வங்கித்துறை ஊழல் அபாயங்களை திறம்பட அணுக முடியும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

Next Story