ஆந்திர பிரதேச அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி அறிமுகம்


ஆந்திர பிரதேச அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி அறிமுகம்
x
தினத்தந்தி 6 Nov 2019 1:58 AM GMT (Updated: 6 Nov 2019 1:58 AM GMT)

ஆந்திர பிரதேசத்தில் அரசு பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டு முதல் ஆங்கில வழி கல்வி அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமராவதி,

ஆந்திர பிரதேச அரசாங்கத்தின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆந்திர பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகள், மண்டல் பரிஷத் பள்ளிகள் மற்றும் ஜில்லா பரிஷத் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் ஆங்கில வழி கல்வியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வரும் 2020-21 ஆம் கல்வி ஆண்டில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையும், அதற்கடுத்ததாக 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கும் ஆங்கில வழி கல்வி அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பள்ளி கல்வி ஆணையத்திற்கு ஆந்திர அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு பள்ளிகளில் தெலுங்கு அல்லது உருது மொழிப்பாடம் கட்டாயப்பாடமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் பாடம் நடத்துவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாகவும், ஆங்கில புலமைக்கான தேர்வுகளின் அடிப்படையில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story