“உங்கள் குழந்தைகள் எங்கு படித்தார்கள்?” - சந்திரபாபு நாயுடுவிற்கு ஜெகன் மோகன் ரெட்டி கேள்வி


“உங்கள் குழந்தைகள் எங்கு படித்தார்கள்?” - சந்திரபாபு நாயுடுவிற்கு ஜெகன் மோகன் ரெட்டி கேள்வி
x
தினத்தந்தி 12 Nov 2019 8:43 AM GMT (Updated: 12 Nov 2019 8:43 AM GMT)

ஆந்திர பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி எதிர்கட்சியினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

ஆந்திர பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் ஆங்கில வழி கல்வியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார். இதற்கு துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு விஜயவாடாவில் நடைபெற்ற தேசிய கல்வி தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஜெகன் மோகன் ரெட்டி எதிர்கட்சியினரின் விமர்சனங்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், “ஆங்கில வழி கல்வியை எதிர்ப்பவர்களின் குழந்தைகள் அனைவரும் எந்தப் பள்ளியில் படிக்கின்றனர்? முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் எந்தப் பள்ளியில் படித்தார்? அவரது பேரக் குழந்தைகள் தற்போது எந்தப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கின்றனர்?” என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஆங்கில அறிவு அவசியம் என்று குறிப்பிட்டார்.

Next Story