ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி; மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு


ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி; மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு
x
தினத்தந்தி 12 Nov 2019 11:05 AM GMT (Updated: 12 Nov 2019 11:05 AM GMT)

இந்திய தலைமை நீதிபதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் கொண்டு வருவது பற்றிய மனு மீது சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்குகிறது.

புதுடெல்லி,

ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியை கொண்டு வருவது பற்றிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.  இந்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்குகிறது.

இதற்காக, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அமர்வில், என்.வி. ரமணா, டி.ஒய். சந்திரசூட், தீபக் குப்தா மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் மற்ற 4 நீதிபதிகளாக அங்கம் வகிக்கின்றனர்.

தீர்ப்பு வழங்குவது பற்றிய அறிவிப்பு சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று நண்பகல் வெளியாகி உள்ளது.

இதன்படி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த மனு மீது நாளை மதியம் 2 மணியளவில் தீர்ப்பு வழங்குகிறது.

Next Story