விமானத்தில் டெல்லி செல்லும் பயணிகளுக்கு முகக்கவசம் - ‘ஏர் ஏசியா’ நிறுவனம் அறிவிப்பு
விமானத்தில் டெல்லி செல்லும் பயணிகளுக்கு முகக்கவசம் வழங்கப்படும் என ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் பயணிகளின் ஆரோக்கியம் கருதி பெங்களூரு, ஐதராபாத், மும்பை, கொல்கத்தா ஆகிய 4 நகரங்களில் இருந்து டெல்லி செல்லும் விமான பயணிகளுக்கு முகக்கவசம் வழங்கப்படும் என்று ‘ஏர்ஏசியா இந்தியா’ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த திட்டம் நேற்றே தொடங்கிவிட்டது. தொடர்ந்து 29-ந்தேதி வரை 10 நாட்களுக்கு இந்த முகக்கவசம் வழங்கப்படும். இந்த திட்டம் ‘எம்பைன்’ நிறுவனத்துடன் இணைந்து அமல்படுத்தப்படுகிறது. குளிர்காலம் தொடங்கியதும் டெல்லியில் காற்று மாசு குறைந்துவிடும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Tags :
Next Story