தேசிய செய்திகள்

உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவிற்கு ஸ்டாலின் வருகை + "||" + MK Stalin arrives in Mumbai to attend Uddhav Thackeray's swearing-in

உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவிற்கு ஸ்டாலின் வருகை

உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவிற்கு ஸ்டாலின் வருகை
உத்தவ் தாக்கரேவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மும்பை சென்றுள்ளார்.
மும்பை,

மராட்டிய மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி (மராட்டிய வளர்ச்சி முன்னணி) அரசு அமைய உள்ளது. இந்த கூட்டணியின் தலைவராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து உத்தவ் தாக்கரே இன்று மராட்டிய மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளார். மும்பையில் உள்ள சிவாஜி பார்க் மைதானத்தில் இன்று மாலை 6.40 மணிக்கு இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சத்திஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல், மத்திய பிரதேச முதல்வர் கமல் நாத் மற்றும் பல முக்கிய நபர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இதையடுத்து உத்தவ் தாக்கரேவின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மும்பை சென்றுள்ளார். மும்பை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவர் இன்று மாலை நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

1. பட்னாவிஸ் கிண்டல் அடித்த விவகாரம்: ‘3 சக்கர வாகன அரசு சரியாக இயங்குகிறது’ உத்தவ் தாக்கரே பதிலடி
தேவேந்திர பட்னாவிஸ் கிண்டல் அடித்தது குறித்து கருத்து தெரிவித்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, மராட்டியத்தில் 3 சக்கர வாகன அரசு சரியாக இயங்குகிறது என பதிலடி கொடுத்தார்.
2. சாலை பாதுகாப்பை வாழ்நாள் பணியாக கடைபிடிக்க வேண்டும்; முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சு
சாலை பாதுகாப்பை வாழ்நாள் பணியாக கடைப்பிடிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசினார்.
3. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு பாராட்டு விழா; சிவசேனா சார்பில் 23-ந் தேதி நடக்கிறது
சிவசேனா சார்பில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு வருகிற 23-ந் தேதி மும்பையில் பாராட்டு விழா நடக்கிறது.
4. பால்தாக்கரே நினைவு சின்னத்துக்காக அவுரங்காபாத் பூங்காவில் ஒரு மரம் கூட வெட்டப்படாது; முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேட்டி
அவுரங்காபாத்தில் உள்ள பிரியதர்ஷினி பூங்காவில் மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேவுக்கு நினைவு சின்னம் கட்டப்பட உள்ளது.
5. டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வன்முறை: மும்பை பயங்கரவாத தாக்குதலை நினைவுப்படுத்துகிறது; முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேட்டி
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் 2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை நினைவுப்படுத்துவதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.