போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களையும் 9-ந்தேதி வரை பாதுகாக்க வேண்டும் - தெலுங்கானா ஐகோர்ட்டு உத்தரவு


போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களையும் 9-ந்தேதி வரை பாதுகாக்க வேண்டும் - தெலுங்கானா ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 6 Dec 2019 9:21 PM GMT (Updated: 6 Dec 2019 9:21 PM GMT)

போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களையும் 9-ந்தேதி வரை பாதுகாக்க வேண்டும் என தெலுங்கானா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் பெண் டாக்டரை கற்பழித்த 4 பேரை தப்ப முயன்றதாக கூறி போலீசார் சுட்டுக்கொன்றனர். இது சட்டத்தை மீறிய செயல் என்றும், இதில் கோர்ட்டு தலையிட வேண்டும் என்றும் தெலுங்கானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஐகோர்ட்டு வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. 4 பேரின் பிரேத பரிசோதனையை சி.டி. அல்லது பென்டிரைவில் வீடியோவாக பதிவு செய்து மெஹபூப்நகர் மாவட்ட முதன்மை நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் அதனை ஐகோர்ட்டு பதிவாளரிடம் இன்று (சனிக்கிழமை) மாலை ஒப்படைக்க வேண்டும். மாநில அரசு 4 பேரின் உடல்களையும் 9-ந்தேதி இரவு 8 மணி வரை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Next Story