ஏர் இந்தியா விற்பனைக்கு மந்திரிகள் குழு ஒப்புதல்


ஏர் இந்தியா விற்பனைக்கு மந்திரிகள் குழு ஒப்புதல்
x
தினத்தந்தி 7 Jan 2020 11:15 PM GMT (Updated: 7 Jan 2020 11:15 PM GMT)

பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா, ரூ.80 ஆயிரம் கோடி கடன் சுமையில் சிக்கி தவிக்கிறது. ஆகவே, அதன் 100 சதவீத பங்குகளையும் விற்று, அதை முற்றிலும் தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புதுடெல்லி, 

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தலைமையில் மந்திரிகள் குழு இப்பணிகளை மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் கூட்டம், 2-வது தடவையாக, நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில், ஏர் இந்தியா விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட பங்கு கொள்முதல் ஒப்பந்தத்துக்கும், விருப்பம் தெரிவிக்கும் படிவத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவை இரண்டும் இம்மாதமே வெளியிடப்படும் என்று மத்திய அரசு உயரதிகாரி தெரிவித்தார்.

Next Story