தேசிய செய்திகள்

கியாஸ் தொழிற்சாலை விபத்தில் 8 பேர் பலி + "||" + 8 killed in Gas factory crash

கியாஸ் தொழிற்சாலை விபத்தில் 8 பேர் பலி

கியாஸ் தொழிற்சாலை விபத்தில் 8 பேர் பலி
கியாஸ் தொழிற்சாலை விபத்தில் 8 பேர் பலியாயினர்.
வதோதரா,

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள கவசத் என்ற கிராமத்திற்கு அருகில் எய்ம்ஸ் தொழிற்சாலை உள்ளது. அங்கு ஆக்சிஜன் கியாஸ் தயாரிக்கப்படுகிறது. தொழிற்சாலையில் நேற்று பகல் 11 மணி அளவில் பயங்கரமாக வெடிக்கும் சத்தம் கேட்டது. இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.


இதுகுறித்து போலீசுக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 15 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சாவு எண்ணிக்கை அதிகமாகக்கூடும் என்ற அச்சம் எழுந்து இருக்கிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 4 மாணவர்கள் உள்பட 5 பேர் பலி; 13 பேர் காயம்
டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 4 மாணவர்கள் உள்பட 5 பேர் பலியாயினர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
2. பெரு நாட்டில் பேருந்து விபத்து: 6 பேர் பலி; 37 பேர் காயம்
பெரு நாட்டில் பேருந்து விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர்.
3. கள்ளக்குறிச்சியில் கார், அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதல்; 4 பேர் பலி
கள்ளக்குறிச்சியில் கார் மற்றும் அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதியதில் நான்கு பேர் பலியாகி உள்ளனர்.
4. நடிகை சபானா ஆஸ்மியின் விபத்து குறித்த செய்தி வருத்தமளிக்கிறது - பிரதமர் மோடி டுவீட்
நடிகை சபானா ஆஸ்மி விபத்தில் காயமடைந்தது குறித்த செய்தி வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
5. கடலூர் செம்மண்டலம் நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகத்தில் திடீர் தீ விபத்து
கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.