“மோடிக்கு எதிராக கோஷமிட்டால் உயிருடன் புதைத்து விடுவேன்” - பா.ஜனதா பிரமுகர் மிரட்டல்


“மோடிக்கு எதிராக கோஷமிட்டால் உயிருடன் புதைத்து விடுவேன்” - பா.ஜனதா பிரமுகர் மிரட்டல்
x
தினத்தந்தி 15 Jan 2020 3:41 AM IST (Updated: 15 Jan 2020 3:41 AM IST)
t-max-icont-min-icon

மோடிக்கு எதிராக கோஷமிட்டால் உயிருடன் புதைத்து விடுவேன் என்று பா.ஜனதா பிரமுகர் மிரட்டல் விடுத்துள்ளார்.

அலிகார்,

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பா.ஜனதா பிரமுகர் ரகுராஜ் சிங் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தார்.

அவர் பேசியதாவது:-

பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக கோஷமிடுபவர்களை உயிருடன் புதைத்து விடுவேன். இருவரும் உங்கள் கோஷத்தை கண்டு கலங்குபவர்கள் அல்ல. அவர்கள் நாட்டை ஆள்பவர்கள். இதேபோன்று தான் ஆள்வார்கள்.

தாவூத் இப்ராகிமிடம் பணம் வாங்கிக்கொண்டு, எங்கள் அதிகாரிகளுக்கு இடையூறு செய்பவர்கள் கடுமையாக அடி வாங்குவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பா.ஜனதா விளக்கம் அளித்தது. ரகுராஜ் சிங், மந்திரியோ, எம்.எல்.ஏ.வோ அல்ல என்று பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சந்திரமோகன் விளக்கம் அளித்தார்.

ஆனால், உத்தரபிரதேச தொழிலாளர் துறையின் ஒரு பிரிவில் ஆலோசகராக ரகுராஜ் சிங் பொறுப்பு வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 More update

Next Story