மக்கள்தொகை மிகுந்த நகரங்களில் சுத்தமான காற்றுக்கான திட்டங்களுக்கு ரூ.4,400 கோடி ஒதுக்கீடு


மக்கள்தொகை மிகுந்த நகரங்களில் சுத்தமான காற்றுக்கான  திட்டங்களுக்கு ரூ.4,400 கோடி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 1 Feb 2020 10:33 PM GMT (Updated: 2 Feb 2020 6:34 AM GMT)

மக்கள்தொகை மிகுந்த நகரங்களில் சுத்தமான காற்றை உறுதி செய்வதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்த பட்ஜெட்டில் ரூ.4 ஆயிரத்து 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி

பட்ஜெட்டில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது:-

10 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்ட நகரங்களில் சுத்தமான காற்று கிடைப்பதில்லை. இது கவலைக்குரியது. அங்கு சுத்தமான காற்றை உறுதி செய்வதற்காக திட்டங்களை வகுத்து செயல்படுத்த    மாநிலங்கள்     ஊக்குவிக்கப்படும். இதற்காக மத்திய அரசு ரூ.4 ஆயிரத்து 400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதுதொடர்பான நடைமுறைகள், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்படும்.

பழைய நீர்மின் நிலையங்கள் அதிக அளவில் கார்பனை உமிழ்கின்றன. எனவே, அத்தகைய நீர்மின் நிலையங்கள் மூடப்படும். அந்த இடங்கள், மாற்று தேவைக்கு பயன்படுத்தப்படும். பருவநிலை மாறுபாடு தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தை பின்பற்றுவதில் உறுதியாக இருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story