அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பாரா?


கெஜ்ரிவால் மற்றும் பிரதமர் மோடி ( PTI Photo)
x
கெஜ்ரிவால் மற்றும் பிரதமர் மோடி ( PTI Photo)
தினத்தந்தி 15 Feb 2020 8:18 AM GMT (Updated: 15 Feb 2020 8:18 AM GMT)

டெல்லி முதல் மந்திரியாக 3-வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் நாளை பதவியேற்கிறார்.

புதுடெல்லி,

டெல்லி சட்டசபை தேர்தலில் 62 தொகுதிகளை கைப்பற்றி ஆளும் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

கெஜ்ரிவால் நாளை  (ஞாயிற்றுக்கிழமை) முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். டெல்லி ராமலீலா மைதானத்தில் 16-ம் தேதி காலை 10 மணிக்கு பதவி ஏற்பு விழா பிரமாண்டமாக நடக்கிறது. பதவியேற்பு விழாவில், வெளி மாநில முதல் மந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.  பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ஆனால், கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் ஞாயிற்றுக்கிழமையன்று சுமார் 30 திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி, தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசிக்கு செல்ல உள்ளார். எனவே, பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பது சந்தேகம் தான் என்று அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story