தேசிய செய்திகள்

மோடியும் அமித்ஷாவும் வெல்ல முடியாதவர்கள் இல்லை ; சிவசேனா + "||" + Modi-Shah not invincible, says Shiv Sena's Sanjay Raut on Delhi Assembly poll results

மோடியும் அமித்ஷாவும் வெல்ல முடியாதவர்கள் இல்லை ; சிவசேனா

மோடியும் அமித்ஷாவும் வெல்ல முடியாதவர்கள் இல்லை ; சிவசேனா
‘மோடியும், அமித்‌ஷாவும் வெல்ல முடியாதவர்கள் அல்ல’ என சிவசேனா தெரிவித்து உள்ளது.
மும்பை,

இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதா வெல்ல முடியாத கட்சியாக தோன்றியது. ஆனால் டெல்லி சட்டசபை தேர்தலில் அந்த கட்சி ஒரு அட்டை வீடு போல சரிந்துவிட்டது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா ராமரைத்தான் கிட்டத்தட்ட முன்னிறுத்தியது. ஆனால் அனுமனை வழிபடும் கெஜ்ரிவால் டெல்லியில் ராம ராஜ்யத்தை கொண்டு வந்து உள்ளார். இங்கு அனுமனுக்கு பின்னால் ராமர் நின்றார்.

தங்களுக்கு வாக்களிக்காதவர்கள் துரோகிகள் என பாரதீய ஜனதா தலைவர்கள் கூறினார்கள். எனவே ஒட்டுமொத்த டெல்லியும் அந்த முத்திரையை பெறப்போகிறதா? மோடியும், அமித்‌ஷாவும் வெல்ல முடியாதவர்கள் அல்ல என்பதையே டெல்லி சட்டசபை தேர்தல் முடிவு காட்டுகிறது. எந்த நாடும் மதம் இல்லாமல் இல்லை. ஆனால் மதம் என்பது தேசபக்தி என்று அர்த்தம் அல்ல.

அரசியல் ஆதாயத்துக்காக மத பிரச்சினைகள் தூண்டப்பட்டன. ஆனால் அதை வாக்காளர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. மோடியும், அமித்‌ஷாவும் மட்டுமே தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற கட்டுக்கதையை மக்கள் கடந்து செல்ல வேண்டும்.

பிரதமர் மோடிக்கும், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையிலான பொதுவான அம்சம் இருவரும் சுயநலவாதிகள் என்பது தான். ஆனால் மோடிக்கு பெரும் ஆணவமும் உள்ளது.

கெஜ்ரிவால் ஒருமுறை முழு நாட்டையும் கைப்பற்ற விரும்புவதாக கூறினார். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் அவர் தனது வரம்பை உணர்ந்து கொண்டு டெல்லியில் தனது கட்சியை கட்டமைத்துக் கொண்டார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நாட்டில் ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என பாரதீய ஜனதா உறுதி அளித்து இருந்தது. ஆனால் 15 ரூபாய் கூட செலுத்தப்படவில்லை. இவ்வாறு அதில் அவர் கூறப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மோடி பகிர்ந்த யோகா வீடியோவுக்கு இவான்கா டிரம்ப் பாராட்டு “அற்புதமானது”
பிரதமர் மோடி பகிர்ந்து கொண்ட யோகா வீடியோ அற்புதமானது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகளான இவான்கா பாராட்டு தெரிவித்துள்ளார்.
2. ‘மோடியின் அறிவுரையை மக்கள் பின்பற்ற வேண்டும்’ - கோலி வேண்டுகோள்
மோடியின் அறிவுரையை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பொருளாதார சரிவை திசை திருப்பவே மதவாத அரசியல் செய்கிறார்கள் - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பொருளாதார சரிவை திசை திருப்ப மதவாத அரசியல் செய்வதாக கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
4. பூரி ஜெகநாதர் கோவிலில் அமித்ஷா வழிபாடு
பூரி ஜெகநாதர் கோவிலில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வழிபாடு செய்தார்.
5. டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய சோனியா காந்தி போர்க்கொடி
டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று சோனியா காந்தி கூறியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலையும் அவர் விமர்சித்தார்.