அமுல்யாவுக்கு நக்சல் அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது ; கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா


அமுல்யாவுக்கு நக்சல் அமைப்புகளுடன் தொடர்பு  உள்ளது ; கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா
x
தினத்தந்தி 21 Feb 2020 8:16 AM GMT (Updated: 21 Feb 2020 8:16 AM GMT)

இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய அமுல்யாவுக்கு நக்சல் அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நேற்று கூட்டம் நடைபெற்றது. ஓவைசி கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் மேடையில் பேசிய அமுல்யா என்ற இளம்பெண் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கோஷம் எழுப்பினார். இளம்பெண் அமுல்யாவின் செயலுக்கு உடனடியாக ஓவைசி கடும் கண்டனம் தெரிவித்ததோடு,  தங்கள் கட்சிக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்தார். 

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய அமுல்யா  மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 14 நாட்கள் நீதிமன்றக்காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா இது குறித்து கூறியதாவது : - “ அமுல்யாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. அமுல்யாவுக்கு ஆதரவு அளிக்க மாட்டேன் என்று அவரது தந்தையே கூறிவிட்டார். நக்சல் அமைப்புடன் அமுல்யாவுக்கு தொடர்பு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்” என்றார். 


Next Story