குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறி போகாது ;அமித்ஷா விளக்கம்


குடியுரிமை  திருத்த சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறி போகாது ;அமித்ஷா விளக்கம்
x
தினத்தந்தி 29 Feb 2020 3:10 AM GMT (Updated: 29 Feb 2020 3:10 AM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறி போகாது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

புதுடெல்லி

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து குடியேறி இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இந்தக் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறி போகாது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது-

”குடியுரிமை சட்ட திருத்தத்தால் சிறுபான்மையினரின் குடியுரிமை பறிக்கப்படும் என்று பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மம்தா உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். அவர்கள் ஏன் பொய் கூறி வருகின்றனர்? குடியுரிமை சட்ட திருத்தம் என்பது யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. 

அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்கக் கூடாதா? அவர்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படக்கூடாதா?   குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய்களை பரப்பி வருகின்றன” என்றார். 


Next Story