ரோம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் தற்காலிகமாக ரத்து


ரோம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் தற்காலிகமாக ரத்து
x
தினத்தந்தி 12 March 2020 4:24 AM GMT (Updated: 12 March 2020 4:24 AM GMT)

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இத்தாலியின் முக்கிய நகரங்களுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரோம், மிலான் மற்றும் சியோல் ஆகிய நகரங்களுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “ ரோம் (இத்தாலி)  நகரத்திற்கான ஏர் இந்தியா விமான சேவை வரும் 15 ஆம் தேதி முதல்  25 ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. 

அதேபோல், மிலன் (இத்தாலி), மற்றும் சியோல் (தென்கொரியா) ஆகிய நகரங்களுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் வரும் 14 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரையில் அனைத்து வித விசாக்களையும் ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், ஏர் இந்தியாவும் தனது சேவையை ரத்து செய்துள்ளது.


Next Story