பட்ஜெட் கூட்டத்தொடர் குறைக்கப்படாது: மத்திய மந்திரி அறிவிப்பு


பட்ஜெட் கூட்டத்தொடர் குறைக்கப்படாது: மத்திய மந்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 13 March 2020 7:22 PM GMT (Updated: 2020-03-14T00:52:13+05:30)

பட்ஜெட் கூட்டத்தொடர் குறைக்கப்படாது என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 11-ந் தேதி வரை நடைபெற்றது. பின்னர் மீண்டும் கடந்த 2-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடையே பட்ஜெட் கூட்டத்தொடர் குறைக்கப்படுவதாக தகவல்கள் பரவியது.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷியிடம் கேட்டபோது, “பட்ஜெட் கூட்டத்தொடரை குறைப்பதற்கான கேள்வியே எழவில்லை. இந்த கூட்டத்தொடர் குறைக்கப்படாது” என்றார்.

Next Story