சத்தீஷ்காரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு


சத்தீஷ்காரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு
x
தினத்தந்தி 21 March 2020 9:27 AM GMT (Updated: 21 March 2020 9:27 AM GMT)

சத்தீஷ்காரில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி உள்ளது.

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரில் மித அளவிலான நிலநடுக்கம் இன்று காலை 11.15 மணியளவில் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி உள்ளது.

இதுபற்றி வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ள செய்தியில், சத்தீஷ்கார் மற்றும் ஒடிசா எல்லை பகுதியையொட்டி தென்கிழக்கே ஜக்தல்பூர் நகரில் இருந்து 34 கி.மீட்டர் தொலைவில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.  ரிக்டரில் 4.2 ஆக பதிவாகியுள்ள இந்நிலநடுக்கம் பஸ்டார் மற்றும் அருகிலுள்ள சுக்மா மாவட்ட பகுதிகளில் உணரப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

இதனால் அந்த பகுதியில் அமைந்த கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசித்து வரும் மக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்து வெளியே ஓடி வந்துள்ளனர்.  எனினும், உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை என உள்ளூர் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.  நிலைமையை உற்று கவனிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Next Story