தேசிய செய்திகள்

மும்பையில் கொரோனாவில் இருந்து மீண்ட முதியவர் உயிரிழந்த பரிதாபம் + "||" + The tragic death of an elderly survivor from Corona in Mumbai

மும்பையில் கொரோனாவில் இருந்து மீண்ட முதியவர் உயிரிழந்த பரிதாபம்

மும்பையில் கொரோனாவில் இருந்து மீண்ட முதியவர் உயிரிழந்த பரிதாபம்
மும்பையில் கொரோனாவில் இருந்து மீண்ட முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மும்பை,

மராட்டியத்தில் கொடிய கொரோனா வைரசுக்கு ஏற்கனவே 2 பேர் இரையாகி உள்ளனர். இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மீண்ட முதியவர் ஒருவர் உயிரிழந்த பரிதாபம் மும்பையில் நடந்து உள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து மும்பை திரும்பிய 68 வயது நபர் ஒருவர் உடல்நலக்குறைவால் மும்பை கஸ்தூர்பா ஆஸ்பத்திரியில் கடந்த 13-ந் தேதி அனுமதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. தனிமை வார்டில் அவருக்கு அளித்த சிகிச்சையின் பேரில் குணமடைந்தார். மருத்துவ பரிசோதனையிலும் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. ஏற்கனவே நீரிழிவு மற்றும் ஆஸ்துமா இருந்ததால் அவர் அந்த நோய் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். கொரோனாவில் இருந்து மறுபிறவி எடுத்த அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு சிறுநீரக செயல்பாடு நின்றதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


இந்த முதியவர் கொரோனா நோய்க்கு உயிரிழக்கவில்லை என்று மத்திய அரசின் சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது - 1½ மாத கைக்குழந்தை உயிரிழந்த பரிதாபம்
அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது. இந்த நோய் தாக்கி பிறந்து 6 வாரங்களே ஆன கைக்குழந்தை பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
2. டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் உள்பட கர்நாடத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 121 ஆக உயர்வு
டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 11 பேர் உள்பட கர்நாடகத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது.
3. மும்பை தாராவி பகுதியில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
மும்பை தாராவி பகுதியில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
4. கொரோனாவுக்கு மேலும் 6 பேர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 16 ஆனது
மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் பலியானார்கள். இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்து உள்ளது.
5. மக்கள் வெளியே வர தடை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் வசித்த பகுதிகளுக்கு சீல்
மதுரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்து வந்த பகுதிக்கு போலீசார் சீல் வைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.